மணமேடையில் அமர்ந்திருந்த மணமகளுக்கு மாப்பிள்ளை திடீரென முத்தம் கொடுத்துள்ள சம்பவத்தால் திருமணம் நின்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் சாம்பல் நகரில் 23 வயது பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயம் செய்து, திருமண ஏற்பாடுகள் கடந்த 29ம் தேதி சிறப்பாக நடந்து கொண்டிருந்துள்ளது.
சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிகழ்ச்சியில் திடீரென மாப்பிள்ளை மணப்பெண்ணிற்கு முத்தம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மணப்பெண் கோபத்தில் எழுந்து சென்ற நிலையில், குறித்த பிரச்சினை பொலிசார் வரை சென்றுள்ளது.
பொலிசார் இரு வீட்டாரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில், விசாரித்த போது மாப்பிள்ளை தனது நண்பர்களிடம் போட்ட பந்தயத்தில் ஜெயிப்பதற்காக, அனைவரது முன்பு முத்தம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். இதனால் மாப்பிள்ளையின் நடத்தையின் மீது சந்தேகம் எழுந்ததாக தெரிவித்த மணப்பெண், தன்னுடைய அனுமதியில்லாமல், முறையற்ற வகையில் சீண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தனக்கு அவமானமாக இருப்பதாக கூறியதுடன், எனது சுயமரியாதை குறித்து அவர் துளியும் கவலைப்படவில்லை… அனைவர் முன்பும் தவறாக நடந்து கொண்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
குறித்த திருமணத்தையும் பெண் நிறுத்தியதால், சமரச பேச்சுக்கும் மணப்பெண் ஒற்றுக்கொள்ளாததால், அவரை பெற்றோர்கள் சில நாட்கள் கழித்து சமாதானம் செய்ய முயற்சிப்பதாக தெரிவித்துள்ளனர்.