Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsசிரியாவில் மக்கள் நடமாடும் இடத்தில் திடீர் குண்டுவெடிப்பு !!!

சிரியாவில் மக்கள் நடமாடும் இடத்தில் திடீர் குண்டுவெடிப்பு !!!

துருக்கி எல்லையையொட்டிய சிரியா நாட்டின் அஜாஜ் நகரில் உள்ள பிரபல சந்தை ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த காரில் நேற்று திடீரென வெடிகுண்டு வெடித்துள்ளது .இந்த வெடிகுண்டு சம்பவத்தில், 8 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.இந்த சம்பவத்திற்கு எந்தவொரு அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக, துருக்கி ஆதரவு பெற்ற குர்தீஷ் இன கிளர்ச்சியாளர் குழுவினர் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட சிரியாவில், இந்த நகரில் கடைசியாக 2 ஆண்டுகளுக்கு முன் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதன்பின்னர், நிலைமை அமைதியாக காணப்பட்டது. இந்நிலையில், இந்த பகுதியில் மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டு உள்ளது.

Recent News