ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த நிலநடுக்கமானது இன்று அதிகாலை 5.11 மணிக்கு ஏற்பட்டதுடன் இது ரிக்டா் அளவுகோலில் 4.6 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ் நிலநடுக்கம் 124 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதுடன் குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இதேவேளை நேற்றையதினமும் ஆப்கானிஸ்தானில் 4.2 மற்றும் 5.2 ரிக்டர் அளவுகோலில் இரண்டு நிலநடுக்கங்கள் உணரப்பட்டன.முதல் நடுக்கம் காலை 5.44 மணிக்கு உணரப்பட்டதுடன் இரண்டாவது நடுக்கம் மாலை 4.25 மணிக்கு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.