Tuesday, December 24, 2024
HomeLatest Newsகாட்டுப் பூனைகளை கொலை செய்யும் வினோத போட்டி- குழந்தைகளிற்கும் வாய்ப்பு வழங்கிய நாடு..!

காட்டுப் பூனைகளை கொலை செய்யும் வினோத போட்டி- குழந்தைகளிற்கும் வாய்ப்பு வழங்கிய நாடு..!

மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நியூசிலாந்து குழந்தைகளிற்கு வினோத போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.

அந்த வகையில் நியூசிலாந்து நாட்டில், காட்டுப் பூனைகளின் அதிக பெருக்கத்தினால் உள்நாட்டில் வசிக்கும் பறவைகள், பல்லிகள், வௌவால்கள், எலிகள், பூச்சிகள் போன்ற உயிரினங்களின் இருப்பிற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனால் நாட்டின் உயிரியல் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காட்டுப் பூனைகள் வேட்டை போட்டியினை அந்நாட்டு அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் முன்னெடுத்து வருகின்றது.

இதுவரை வயது வந்தவர்களே காட்டு பூனைகள் வேட்டை போட்டியில் கலந்து கொண்டுள்ள நிலையில் இந்த வருடம் 14 வயது நிரம்பியவர்கள் மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகள் கலந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை தொடர்ந்து விலங்கு நல ஆர்வலர்கள், குழந்தை நல ஆர்வலர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் ஆகியோர் கடுமையான விமர்சனங்களுடன் கூடிய எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதால் குறித்த விழா ஏற்பாட்டாளர்கள் போட்டியை ரத்து செய்துள்ளனர்.

மேலும் இந்த போட்டியில் வெற்றி பெரும் போட்டியாளரிற்கு பரிசு தொகையாக இந்திய மதிப்பில் 12,735 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recent News