Thursday, January 23, 2025
HomeLatest Newsவியட்நாமிலுள்ள இலங்கை அகதி ஒருவர் விபரீத முடிவு எடுத்து உயிர்மாய்ப்பு!

வியட்நாமிலுள்ள இலங்கை அகதி ஒருவர் விபரீத முடிவு எடுத்து உயிர்மாய்ப்பு!

வியட்நாம்மில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கை அகதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கைக்கு செல்ல முடியாது என கோரி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரு இலங்கை அகதிகள்  தவறான முடிவு எடுத்து உயிர்மாய்க்க  முயற்சித்திருந்தனர்.

இவ்வாறு உயிர்மாய்க்க முயற்சித்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததை அடுத்து, அவர் அந்த நாட்டின் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த ஒருவரே, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வியட்நாம்மிலுள்ள இலங்கை அகதியொருவர் உறுதிப்படுத்தினார்.

யாழ்ப்பாணம் – சாவக்கச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்திரலிங்கம் கிரிதரன் இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

சடலத்தை மீள வழங்குவதற்கு அந்த நாட்டு அதிகாரிகள் பாரிய தொகையொன்றை கோரி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், குறித்த நபரின் சடலம் தொடர்ந்தும் அந்த நாட்டு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

Recent News