Wednesday, December 25, 2024
HomeLatest Newsநாட்டில் எதிர்வரும் 19ஆம் திகதி அனைத்து அரச நிறுவனங்களுக்கும் சிறப்பு விடுமுறை!

நாட்டில் எதிர்வரும் 19ஆம் திகதி அனைத்து அரச நிறுவனங்களுக்கும் சிறப்பு விடுமுறை!

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் 19 ஆம் திகதி தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 19 ஆம் திகதி அனைத்து அரச நிறுவனங்களுக்கும் சிறப்பு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை 19ஆம் திகதி வரை தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் எனவும் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News