Tuesday, December 24, 2024
HomeLatest Newsசூரியனுக்கு மேல் ஊர்ந்து செல்லும் பாம்பு! மெய் சிலிர்க்கும் காட்சி

சூரியனுக்கு மேல் ஊர்ந்து செல்லும் பாம்பு! மெய் சிலிர்க்கும் காட்சி

சூரியனுக்கு மேல் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வது போன்ற ஒரு காட்சி வெளியாகி காண்போரை சிலிர்க்க வைத்துள்ளது.

சூரிய பாம்பு என்பது என்ன?

உண்மையில் இந்த சூரிய பாம்பு (solar snake) என்பது ஒரு அரிய அறிவியல் நிகழ்வாகும்.

சூரியனில் பரப்பில் காணப்படும் குளிர்ந்த பிளாஸ்மா, (இது, அறிவியலில் திடப்பொருள், திரவப்பொருள், வாயு போன்ற நான்காவது நிலையாகும்) சூரியனின் பரப்பிலிருக்கும் சூடான பிளாஸ்மாவில் உள்ள காந்தப் புலங்களால் தள்ளப்படும்போது, அது நகரும் ஒரு காட்சி பாம்பு ஊர்வது போல காணப்படுவதால், அது சூரிய பாம்பு என அழைக்கப்படுகிறது.

ஐரோப்பிய விண்வெளி ஏஜன்சியால் உருவாக்கப்பட்ட Solar Orbiter என்னும் சூரியனைக் கண்காணிக்கும் சேட்டிலைட்டின் கமெராவில் இந்தக் காட்சி சிக்கியுள்ளது.

விநாடிக்கு 170 கிலோமீற்றர் வேகம்

நாம் பார்ப்பதற்கு ஓரளவு வேகமாக இந்த சூரியப் பாம்பு நகர்வது போல தெரிந்தாலும், உண்மையில், அது விநாடிக்கு 170 கிலோமீற்றர் வேகத்தில் நகருமாம். அதாவது, நமது நேரப்படி அந்த பாம்பு சூரியனின் பரப்பின் மீது சுற்றிவர மூன்று மணி நேரம் ஆகுமாம்.இந்த நிகழ்வு நமது பூமியிலுள்ள தொழில்நுட்பங்கள் மற்றும் சேட்டிலைட்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கருதப்படுவதால், இந்த அரிய கண்டுபிடிப்பு விண்வெளியில் காணப்படும் சூழல் குறித்த சில புதிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தலாம் என நம்பப்படுகிறது. 

Recent News