Tuesday, December 24, 2024

முடி உதிர்வு முதல் மாரடைப்பு வரை அனைத்துக்கும் மருந்தாகும் ஒரு துளி வெங்காய சாறு….!

அனைத்து உணவுகளிலும் தவறாமல் சேர்க்கப்படும் ஒரு உணவுப் பொருள் தான் வெங்காயம்.வெங்காயத்தை வதக்கியோ அல்லது வேகவைத்தோ எப்படி வேண்டும் என்றாலும் சாப்பிடலாம்.

ஆனால் பச்சையாக சாப்பிட்டால் அதில் இருக்கும் ஊட்டச்சத்து முழுமையாகக் கிடைக்கும்.

வெங்காயம் பல்வேறு வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவை அடங்கிய காய்களில் ஒன்று. இதில் உடலுக்கு நன்மையளிககும் பல்வகை சேர்மங்கள் நிறைந்திருக்கின்றன.

வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு ஆகும்.

இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், வெங்காயத்தை நறுக்கும்போது நமது கண்களில் வரும் கண்ணீருக்கும் காரணம் ஆகும்.

வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது.

வெங்காயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன. வெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்களை பழங்காலந்தொட்டே நம்முடைய முன்னோர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.

இவற்றை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

வெங்காயத்தின் நன்மைகள்


நெஞ்சு வலி – நெஞ்சு வலி காரணமாக இதய உள்ள ரத்த நாளங்களில் இரத்தம் உறைவு ஏற்படுவதால் நெஞ்சு வலி ஏற்படும்.

பக்க வாதம் கூட அதனால் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அப்படி நெஞ்சுவலி பிரச்சினை இருக்கிறவர்கள் தினமும் வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தம் உறையும் பிரச்சினை சரியாகும்.

இதய நோய் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகவும் உணவாகவும் வெங்காயம் இருக்கும்.

​நுரையீரலை சுத்தம் செய்ய – புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தினமும் அரை டீஸ்பூன் வெங்காயம் சாறினை காலை, மதியம், மாலை, இரவு என நான்கு வேளை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் பலம் பெறும்.

இதை போன்று வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு வாந்தால் இருமல், இரத்த வாந்தி, ஜலதோசம் மற்றும் சளி போன்ற பிரச்சினைகள் குணமாகும். இதன்மூலம் நுரையீரலில் உள்ள அழுக்குகள் மற்றும் கழிவுகள் வெளியேறும்.​

ஜலதோசம் குணமாக -பொதுவாக குளிர்காலத்தில் அனைவருக்கும் ஜலதோசம், இருமல், காய்ச்சல், நெஞ்சி சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்த பிரச்சனை குணமாக வெங்காய சாறுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

இவ்வாறு சாப்பிடுவதால் குளிர்காலத்தில் ஏற்படும் இருமல், சளி பிரச்சனைகள் குணமாகும். குழந்தைகளுக்கும் இதைக் கொடுக்கலாம்.

​மூலநோய் குணமாக – இரத்த மூலம் போன்ற கடுமையான மூல நோய்களும் குணமாக 50 கிராம் வெங்காயத்தை சாறெடுத்து தண்ணீர் சேர்த்து அதனுடன் சர்க்கரை சேர்த்து அருந்த வேண்டும்.

இந்த முறை தினமும் இரண்டு வேளை என்று பத்து அல்லது பதினைந்து நாட்கள் குடித்து வந்தால் இரத்த மூலம் குணமாகும். சின்ன வெங்காயம் பயன்படுத்துவது கூடுதல் பயனைத் தரும்.

​பல் வலி

பல்வலி உள்ளவர்கள் வெங்காயத்தை ஒரு துண்டு எடுத்து பல்வலி உள்ள இடத்தில் வைத்தால் பல்வலி குணமாகும்.

பித்தம்

4-5 வெங்காயத்தை தோலுரித்து, அத்துடன் சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள பித்தம் குறையும். பித்த ஏப்பமும் மறையும்.

காது இரைச்சல்


வெங்காயச் சாறு மற்றும் கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்துச் சூடாக்கி வெதுவெதுப்பான சூட்டில் காதில் விட, காது இரைச்சல் மறையும்.

மூலக்கோளாறு

வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டுத்தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து கலந்து, சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

எடையை குறைக்கும்


வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம். மேலும் இது உடலில் உள்ள கொழுப்புக்களையும் கரைக்கும்.

செரிமானம்


வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையைச் சுத்தப்படுத்துகிறது. மேலும் செரிமானத்திற்கு உதவுகிறது.

இரத்த அழுத்தம்


வெங்காயம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். அதுமட்டுமின்றி, இழந்த சக்தியையும் மீட்கும்.

நுரையீரல் சுத்தமாகும்


தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காய சாற்றினை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

மூட்டு வலி


வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவி வர வலி குணமாகும்.

முகப்பரு


நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

மாலைக்கண் நோய்


வெங்காயச் சாற்றோடு சிறிது உப்புக் கலந்து அடிக்கடி சாப்பிட்டு வர, மாலைக்கண் நோய் சரியாகும்.

கண் வலி மற்றும் கண் சோர்வு


வெங்காயச் சாற்றையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

நீரிழிவு


சிறிது வெங்காயத்தில் இன்சுலின் உள்ளதால், நீரழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

முடி வளர்ச்சி


தலையில் ஆங்காங்கு முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால், சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கித் தேய்த்து வர முடி வளரும்.

Latest Videos