Friday, December 27, 2024
HomeLatest Newsகாலிமுகத்திடல் தாக்குதல் இராணுவத்தின் ரகசிய திட்டமா?

காலிமுகத்திடல் தாக்குதல் இராணுவத்தின் ரகசிய திட்டமா?

கொழும்பு – காலிமுகத்திடலில் இன்று அதிகாலை ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஒரு திட்டமிடப்பட்ட இராணுவ நடவடிக்கை என இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இந்த இராணுவ நடவடிக்கைக்கு அவர்கள் பெயரொன்றை வைத்திருப்பார்கள்.

சில சமயங்களில் அவர்கள் அதனை வெளியில் கூறுவதில்லை. ஏனென்றால் இந்த நடவடிக்கை மிகவும் துல்லியமாக திட்டமிடப்பட்ட இரகசிய நடவடிக்கை.

இலங்கை அரசாங்கமானது முழுமையான படை நடவடிக்கை மூலம் போராட்டத்தை இல்லாது செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

நன்கு திட்டமிடப்பட்ட படை நடவடிக்கை தான் இது. இதற்கான அங்கீகாரம் அனைத்துலக சமூகத்தினரால் புதிய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுவிட்டது என்றார்.

Recent News