Friday, April 4, 2025
HomeLatest News74 நாட்கள் நீருக்கடியில் வாழ்ந்து நபரொருவர் சாதனை...!

74 நாட்கள் நீருக்கடியில் வாழ்ந்து நபரொருவர் சாதனை…!

ஆராய்ச்சியாளர் ஒருவர் நீண்ட நாட்கள் நீருக்கடியில் வாழ்ந்து சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளரான ஜோசப் என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

அந்த ஆராய்ச்சியாளர் ஆழ்கடலில் முழுமையாக அடைக்கப்பட்ட அறை போன்று வடிவமைக்கப்பட்ட அமைப்பில் தினசரி நடவடிக்கைகளை மேற்கொண்டு வாழ்ந்து வருகின்றார்.

நீருக்கடியில் தீவிர அழுத்தத்தில் வாழும் இந்த பரிசோதனை எதிர்கால ஆழ்கடல் பயணிகளுக்கு உதவியாக இருக்கும் என்று ஜோசப் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மருத்துவ மற்றும் நீர்வாழ் ஆராய்ச்சிகளை ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு கற்பிப்பது தான் இந்த பரிசோதனையின் குறிக்கோள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமன்றி, தொடர்ந்து 74 நாட்கள் நீருக்கடியில் வசித்து வரும் அவர் 100 நாட்களை இலக்காக கொண்டு இந்த சாகசத்தை நிகழ்த்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Recent News