Wednesday, December 25, 2024
HomeLatest Newsஇலங்கையில் நடந்த அபூர்வ சத்திர சிகிச்சை – அழகாக மாறிய இளைஞன்!

இலங்கையில் நடந்த அபூர்வ சத்திர சிகிச்சை – அழகாக மாறிய இளைஞன்!

கேகாலை ஆதார வைத்தியசாலையில் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை மூலம் இளைஞன் ஒருவரின் முகத்தில் இருந்த பிறப்பு அடையாளத்தை முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணரான வைத்தியர் ஆனந்த குமார ஜயவர்தன என்பவரினால் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு முன் பல அற்புதமான சத்திர சிகிச்சைகளை இந்த வைத்தியரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரத்தினபுரி உட கரவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய திருமணமாகாத இராணுவ வீரருக்கே இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான சத்திர சிகிச்சையை மேற்கொண்ட சத்திர சிகிச்சை நிபுணர் ஆனந்த ஜயவர்தன குறிப்பிடுகையில்,

“இது சவாலான சத்திர சிகிச்சையாகும். சில வாரங்களுக்கு முன்பு இந்த இளைஞன் தன்னிடம் வந்து, தனது முகத்தில் இந்த பிறப்பு அடையாளத்தால் அவதிப்படுவதாகவும், சமூகத்தை எதிர்கொள்ள கூட விரும்பவில்லை என்றும் கூறினார். மேலும் இது தொடர்பாக மருத்துவ ஆலோசனை பெற்றும் பலன் இல்லை என்றும் கூறினார்.

அவரைப் பரிசோதித்து அவரது மன நிலையைப் புரிந்துகொண்டு கேகாலை வைத்தியசாலையில் தங்குமாறு அறிவுறுத்தியதுடன் 04ஆம் திகதி மாலை சத்திர சிகிச்சையை ஆரம்பித்தேன். பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை மூலம் காலில் இருந்து எடுக்கப்பட்ட தோல் பாகங்கள் முகத்தில் பொருத்தப்பட்டன.

இதற்காக சுமார் இரண்டரை மணி நேரம் ஆனது. இது சவாலானது. சரியாக செய்யவில்லை என்றால், முகம் சிதைந்துவிடும். பிறப்பு வடு காரணமாக, தோலை முழுவதுமாக அகற்ற வேண்டியிருந்தது.

இதற்கு அறிவும் அனுபவமும் தேவை. அறுவை சிகிச்சைக்கு ஊழியர்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்தது. நோயாளி ஆரோக்கியமாக இருக்கிறார் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் சில நாட்களில் வீடு திரும்ப முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recent News