Friday, January 24, 2025
HomeLatest Newsஎலான் மஸ்க்கிடம் வேலை செய்ய அரிய வாய்ப்பு..!பதில் தெரிந்தவர்கள் அதிஷ்டசாலி..!

எலான் மஸ்க்கிடம் வேலை செய்ய அரிய வாய்ப்பு..!பதில் தெரிந்தவர்கள் அதிஷ்டசாலி..!

தன்னிடம் வேலை செய்ய விரும்புவோரிற்கு எலான் மஸ்க் கேள்வி ஒன்றினை முன்வைத்துள்ளார்.

நாம் எவ்வளவு கெட்டிக்கார தனமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து இருந்தாலும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் சுய சிந்தனையே முக்கியமான ஒன்றாக திகழ்கின்றது.

அதிலும் படிப்பை முடித்த பின்னர் வேலையைத் தேடி செல்லும் போது நேர்காணலே எம் வாழ்க்கையை மாற்றியமைக்கும்.

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து அதிரடியாக மாற்றங்களை செய்து வருகின்றார்.

புத்தி கூர்மை அதிகமாகவுடைய இவர் தற்போது தன்னிடம் வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு கேள்வியை மட்டும் முன் வைத்துள்ளார்.

அதாவது, நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்தித்த மிகப் பெரிய பிரச்சனை என்ன? அந்தப் பிரச்சினையை சமாளித்து நீங்கள் எப்படி வெளியே வந்தீர்கள்? என்பதே அவரது கேள்வியாகும்.

இந்த ஒரு கேள்விக்கு பதில் அளித்தால் எலான் மஸ்கிடம் வேலைக்கு சேர்ந்து விடலாம்.

நமது பிரச்சனையை நாமே சமாளித்து ஒரு கட்டத்தில் வெளியேறும் போது வாழ்க்கையின் தத்துவம் நமக்கு நன்றாக புரிந்து விடும் என்பதையே எலான் மஸ்க் கேள்வியாக முன்வைத்துள்ளார்.

Recent News