Friday, November 15, 2024
HomeLatest Newsஇலங்கைக்கு மட்டுமே உரித்தான அரிய உயிரினம் வவுனியாவில் கண்டுபிடிப்பு!

இலங்கைக்கு மட்டுமே உரித்தான அரிய உயிரினம் வவுனியாவில் கண்டுபிடிப்பு!

வவுனியா ஓமந்தையில் இலங்கைக்கு மட்டுமே உரித்தான தாசியா ஹாலியானஸ் எனும் அரணை இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு மட்டும் உரித்தான தாசியா ஹாலியானஸ் எனும் உயிரியல் பெயருள்ள தனித்துவம் மிக்க பெரும்பாலும் மரங்களிலேயே வாழும் இந்த உயிரினம் வவுனியா ஓமந்தை பகுதியிலுள்ள தொழிற்சாலை வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற உயிரினங்களை வகைப்பிரித்து ஆய்வு செய்த முடிவில் இது இலங்கைக்கு மட்டும் உரித்தானது என உறுதிப்படுத்தப்பட்டது.

சுமார் 8 செ.மீ நீளமுடைய இந்த தனித்துவம் மிக்க உயிரினம் மற்றைய அனைத்து சகோதர இனங்களிடமிருந்தும் வேறுபட்டது.

உடலின் நடுப்பகுதியில் 22-24 குறைந்த எண்ணிக்கையிலான வரிசைகள் மற்றும் விரிவாக்கப்பட்ட முதுகெலும்பு வரிசை செதில்களும் உள்ளன. இந்த உயிரினம் அரிதாக காணப்பட்ட நிலையில் 1970 ஆம் ஆண்டு இலங்கை மத்திய நாணயத்தாளில் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent News