Wednesday, December 25, 2024
HomeLatest Newsகழிவறையில் கைவிடப்பட்ட ஒரு நாய்க்குட்டி!

கழிவறையில் கைவிடப்பட்ட ஒரு நாய்க்குட்டி!

அழகான நாய்க்குட்டியை விமான நிலைய கழிவறையில் விட்டுவிட்டு உருக்கமான கடிதத்தையும் அதனுடனே வைத்துவிட்டு சென்றிருக்கிறார் அதன் பெண் உரிமையாளர்.

அமெரிக்காவில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான கடிதம்தான் தற்போது சமூக வலைதளங்களில் இணையவாசிகளின் கவனத்தை பெற வைத்து அவர்களை உருகவும் செய்திருக்கிறது.

ச்சூவி என பெயரிடப்பட்டிருக்கும் பிறந்து மூன்று மாதமே ஆன நாய்க்குட்டியைதான் அப்பெண் கைவிட்டுள்ளார். அவர் விட்டுச் சென்ற அந்த கடிதத்தில் “ஹாய், நான் ச்சூவி. என்னோட உரிமையாளர் ஒரு கொடுமையான உறவில் சிக்கியிருக்கிறார். அவரால் என்னை விமானத்தில் கொண்டுச் செல்ல முடியாமல் போனது. அவருக்கு என்னை விட்டு பிரிய மனமில்லை. இருப்பினும் என்னை விட்டு போவதை தவிர அவருக்கு வேறு வழியும் இல்லை” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தயவுசெய்து ச்சூவியை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்” என நாய்க்குட்டியின் பெண் உரிமையாளர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விமான நிலைய கழிவறையில் விடப்பட்ட ச்சூவி நாய்க்குட்டியை கண்ட பெண் ஒருவர் அதனை மீட்டு லாஸ் வேகாஸில் உள்ள லிண்டியா கில்லியம் என்பவரின் நாய் மீட்பு அமைப்பில் சேர்த்திருக்கிறார்.

அங்கு ச்சூவி நலமாக வசித்து வருவதாகவும் Mirror செய்தி நிறுவனத்தின் செய்தி மூலம் அறிய முடிகிறது.

Recent News