Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsவிளாடிமிர் புடினின் கைது தொடர்பில் ஜனாதிபதி ஒருவர் எச்சரிக்கை..!

விளாடிமிர் புடினின் கைது தொடர்பில் ஜனாதிபதி ஒருவர் எச்சரிக்கை..!

ஜோகன்னஸ்பர்க் நகரில் முன்னெடுக்கப்படும் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்க ரஷ்ய ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த உச்சி மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கலந்து கொள்வார் என்று நம்பப்படுகிறது.

இந்த நிலையில் உக்ரைன் போர் குற்றம் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி புடின் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் கசிந்த நிலையில், அவ்வாறு அவர் கைது செய்யப்பட்டால் அது ஒரு போர் பிரகடனமாக இருக்கும் என தென்னாப்பிரிக்கா ஜனாதிபதி சிரில் ரமபோசா வெளிப்படையாக எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உறுப்பு நாடான தென்னாப்பிரிக்கா, விளாடிமிர் புடினை கைது செய்யும் பொருட்டு உதவ முன்வர வேண்டும் என வலியுறுத்தி நீதிமன்றத்தை நாடியுள்ள போதும் , தேச பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அப்படியான எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதை ஜனாதிபதி சிரில் ரமபோசா எதிர்த்து வருவதாக கூறப்படுகிறது.


பதவியில் இருக்கும் ஒரு ஜனாதிபதியை வெளிநாட்டு மண்ணில் கைது செய்வது என்பது போர் பிரகடனம் என ரஷ்யாவும் எச்சரித்துள்ளது.


இதனிடையே, ஜோகன்னஸ்பர்க் நகரின் பல பகுதிகளில் ஜனாதிபதி ரமபோசாவே, புடினை கைது செய்யுங்கள் என வலியுறுத்தி பதாகைகள் நிறுவப்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் விளாடிமிர் புடின் ஜோகன்னஸ்பர்க் நகரில் கால் பதித்தால், அவரை கைது செய்ய வேண்டிய நெருக்கடிக்கு ஜனாதிபதி ரமபோசா தள்ளப்பட்டுள்ளார் .


இதனால் புடின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு வருகை தருவார் என்றால், அது தென்னாப்பிரிக்கா இதுவரை எதிர்கொள்ளாத அதிர்வலைகளை ஏற்படுத்தும் எனவும் நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கின்றனர்.

Recent News