Thursday, December 26, 2024

தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட பொலிஸ் அதிகாரி!

அம்பாறையில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தனக்கு தானே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த உப பொலிஸ் பரிசோதகர் தற்போது அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவர் ஒரு பிள்ளையின் தந்தையான, ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவராவார்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் கண்டறிப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Latest Videos