Thursday, November 14, 2024
HomeLatest Newsமண் இல்லாமல் வளரும் செடி! 70 லட்ச ரூபாய் வருமானம் பெறும் நபர்

மண் இல்லாமல் வளரும் செடி! 70 லட்ச ரூபாய் வருமானம் பெறும் நபர்

மண் இல்லாமல் இயற்கையான முறையில் விவசாயம் செய்து ஆண்டுக்கு 70 லட்ச ரூபாய் வருமானம் வருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம். உண்மை தான், Hydroponic முறையில் வெறும் நீரில் செடிகளை வளர்த்து விவசாயம் செய்து வருகிறார் இந்தியாவின் உத்திரபிரதேசத்தை சேர்ந்த ரம்வீர் சிங்.

உத்தரபிரதேசத்தின் Bareillyயை சேர்ந்தவர் ரம்வீர் சிங், மூன்று மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் மண், செயற்கை உரங்கள் ஏதுமின்றி ஸ்ட்ராபெர்ரி, காலிபிளவர் மற்றும் வெண்டைக்காய்களை விளைவித்து வருகிறார்.

மூன்று மாடிகளில் மட்டும் சுமார் 10,000 செடிகளை வளர்த்து வருகிறார், இதுதவிர அவருடைய சொந்த நிறுவனமான Vimpa Organic and Hydroponics மூலம் ஆண்டுக்கு 70 லட்ச ரூபாய் வரை வருமானமும் ஈட்டி வருகிறார்.

Hydroponics முறைப்படி செடிகள் வளர மண் தேவையில்லை, சாதாரணமாக பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவை விட 90 சதவிகிதம் இந்த முறைப்படி மிச்சப்படுத்தலாம்.

இதுதவிர மற்றவர்களுக்கும் செடிகள் வளர்க்கும் முறைப் பற்றி கற்றுக்கொடுத்து வருகிறார் ரம்வீர் சிங்.

ரம்வீர் சிங் Better Indiaக்கு அளித்த பேட்டியில், 2009ம் ஆண்டு தங்களது உறவினர் ஒருவர் புற்றுநோயால் மரணமடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு செயற்கையான உரங்கள் கொண்டு விளைவித்ததே காய்கறிகளை உட்கொண்டதே காரணம் என தெரியவந்த போது, குடும்பமே சுக்குநூறாக உடைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற கொடிய மரணங்களில் இருந்து குடும்பத்தை பாதுகாக்க, இயற்கையான முறையில் காய்கறிகளை பயிரிட ரம்வீர் சிங் முடிவெடுத்துள்ளார்.

இதற்காக பத்திரிக்கையாளர் வேலையை விட்டு விட்டு, முழு நேர விவசாயியாக மாறி இயற்கை பண்ணையை அமைத்து காய்கறிகளை விளைவித்து வருகிறாராம் ரம்வீச் சிங், இதில் தான் வெற்றியும் கண்டதாக நெகிழ்கிறார்.

பிற செய்திகள்

Recent News