முதியவர் ஒருவர் இறந்த உறவினர் ஒருவரின் சடலத்துடன் வசித்து வந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் பிர்மிங்காம் நகரில் இருந்து வடமேற்கே 32 மைல்கள் தொலைவில் சிப்சி என்ற சிறிய நகரில் 61 வயதான லியாண்ட்ரூ ஸ்மித் ஜூனியர் என்பவர் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில்,லியாண்ட்ரூ ஸ்மித் ஜூனியரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, அந்த தகவலை வேறு யாருக்கும் தெரியப்படுத்தாது இறந்த உடலுடன் லியாண்ட்ரூ ஒன்றாக வசித்து வந்துள்ளார்.
இது தொடர்பாக ஒரு நாள் பொலிஸாரிற்கு தகவல் தெரிய வந்தமையால் அந்த முதியவரின் வீட்டிற்கு சென்ற பொலிஸார் அங்கு தீவிர சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதன் பொழுது ஸ்மித், தனது இறந்த உறவினரின் உடலுடன் ஒன்றாக வசித்து வந்தது தெரிய வந்தமையால் இறந்த உடலை தவறாக பயன்படுத்தினார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
எனினும், அந்த நபர் உயிரிழந்து எவ்வளவு நாட்கள் என்பது பற்றியோ அல்லது ஸ்மித்தின் சட்ட நடவடிக்கைகள் பற்றியோ தகவல்கள் வெளியிடப்படவில்லை.
அமெரிக்காவில் மனித உடலை இவ்வாறு நடத்துவது குடும்ப உணர்வுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சட்டவிரோத செயலாக கருதப்படுகின்றது.
மேலும், அந்த நபரின் மரணத்திற்கான காரணம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.