எவரெஸ்ட் சிகரத்தில் ஆழமான விரிசலில் சிக்கிய ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த விரிசலில் சிக்கிய மலை ஏறுபவரை தைரியமாக மீட்கும் காணொளி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஜெஸ்மன் தமாங் என்ற மலையேற்ற வீரர் மலை ஏறுபவரை பாதுகாப்பாக மீட்கும் காணொளியை டூவிட்டரில் பகிர்ந்துள்ள நிலையில் இணையவாசிகள் மீட்பு குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அந்த காணொளியில் எவரெஸ்ட் சிகரத்தின் ஆழமான விரிசலில் சிக்கிய ஒருவர் பனியில் புதைந்த நிலையில் காணப்படுகின்றார்.
அவ்வாறு இருப்பவரை மீட்பு பணியாளர்கள் மலை ஏறுபவரின் தோள்களில் கயிற்றை கட்டி மீட்கும் காட்சிகள் காணப்படுகின்றது.
மேலும் அவர் தனது பதிவில் எவரெஸ்ட் சிகரத்தில் பல துணிச்சலான மீட்புகள் இடம்பெறுகின்றன. அதில் வழிகாட்டிகளையும் மீட்க வேண்டிய நிலைமைகள் ஏற்படலாம்.
மலை ஏறுபவர்களின் கனவுகளை நனவாக்கும் வழிகாட்டிகளின் தியாகங்கள், அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் அனைத்தையும் நாம் நினைவு கூற வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.