Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsமூடநம்பிக்கையால் நாக்கை வெட்டி சிவனுக்கு காணிக்கை அளித்த நபர்..!!

மூடநம்பிக்கையால் நாக்கை வெட்டி சிவனுக்கு காணிக்கை அளித்த நபர்..!!

ஒரு நபர், தனது நாக்கை வெட்டி கடவுளுக்கு காணிக்கை செலுத்திய சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து அந்த நபரை கிராமத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டம், அஞ்சோரா காவல் சௌக்கி எல்லைக்கு உட்பட்ட தனாட் கிராமத்தில் ராஜேஷ்வர் நிஷாத் (33) என்பவர், கிராமத்தில் உள்ள குளத்துக்கு சென்றார்.பின்னர், சில மந்திரங்களை ஓதிக் கொண்டு, அவர் தனது நாக்கை கத்தியால் வெட்டி, நீர்நிலையின் கரையில் ஒரு கல்லில் வைத்தார்.

பின்னர் அப்பகுதியில் உள்ள ஒரு கோயிலில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேஷ்வரை கண்ட கிராம மக்கள், ஆம்புலன்ஸை வரவழைத்து, மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கிராமவாசிகள் தகவல் படி, ராஜேஷ்வர் நிஷாத்தின் மனைவி வாய் பேச இயலாதவர். மேலும் தனது சில அபிப்பிராயங்களை நிறைவேற்றுவதற்காக தனது நாக்கை வெட்டி சிவபெருமானுக்கு காணிக்கை செலுத்தியுள்ளார்.

Recent News