Friday, January 24, 2025
HomeLatest Newsஎவரெஸ்ட் சிகரத்தில் 27 தடவைகள் ஏறி நபரொருவர் சாதனை..!

எவரெஸ்ட் சிகரத்தில் 27 தடவைகள் ஏறி நபரொருவர் சாதனை..!

நபர் ஒருவர் 27 வது தடவைகள் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து, உலகின் மிக உயரமான மலையின் உச்சத்தை அடைந்த சாதனையை மீட்டெடுத்துள்ளார்.

நேபாளத்தை சேர்ந்த 53 வயதான காமி ரீட்டா ஷெர்பா என்பவரே இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆவர் .
இதனால் இவர் எவரெஸ்ட் மனிதன்” என்றும் அழைக்கப்படுகின்றார்.

காமி ரீட்டா, 20 ஆண்டுகளுக்கும் அதிகமாக மலையேற்ற வழிகாட்டியாக இருந்து வருகின்றார். இந்நிலையில் இவர் 29 ஆயிரத்து 29 அடி உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தை முதன் முதலில் 1994 ஆம் ஆண்டளவில் அடைந்துள்ளார்.

எவரெஸ்ட் சிகரத்தில் அதிக தடவைகள் ஏறியவர் என்ற பெருமையை பெற்றுள்ள ரீட்டா ஷெர்பா, சாதனைகள் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எதனையும் செய்யவில்லை என கூறியுள்ளார்.

அத்துடன், தான் மலையேற்ற வழிகாட்டியாக பணிபுரிந்ததால், தானாகவே இந்த சாதனையும் நிகழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இவர் எவரெஸ் சிகரத்தில் மட்டுமன்றி, காட்வின் ஆஸ்டன், லேட்சே, மனஸ்லு, சோ ஓயு ஆகிய சிகரங்களிலும் சாதனை படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News