பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ். ஐ. க்கு உளவு பார்த்ததாக உத்தரபிரதேச பயங்கரவாத எதிர்ப்பு படை ஒரு இளைஞரை கைது செய்ததாக போலீசார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
கோண்டா மாவட்டத்தில் உள்ள தின்புர்வாவில் வசிக்கும் முகிம் சித்திக் என்கிற அர்ஷத் என்பவர் கைது செய்யப்பட்டதாக பயங்கரவாத எதிர்ப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
அவரிடம் இருந்து இரண்டு சிம் கார்டுகள் மற்றும் ஒரு மொபைல் போன் ஆகியவை மீட்கப்பட்டன.
ஜூலை 16 அன்று, ஐ.எஸ். ஐ. க்கு உளவு பார்த்ததாகவும், தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் முகமது ரயீஸ், அர்மான் அலி மற்றும் முகமது சல்மான் சித்திக் ஆகியோரை ஏ. டி. எஸ் கைது செய்தது.
குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரிடம் விசாரித்தபோது, சித்திக்கியும் ஐ.எஸ். ஐ. யில் பணியாற்றியது தெரியவந்தது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.