Tuesday, December 24, 2024
HomeLatest NewsIndia Newsவிமானத்தில் மலம் மற்றும் சிறுநீர் கழித்த பயணி...!ஏற்பட்ட சிக்கல்..!பரபரப்புச் சம்பவம்..!

விமானத்தில் மலம் மற்றும் சிறுநீர் கழித்த பயணி…!ஏற்பட்ட சிக்கல்..!பரபரப்புச் சம்பவம்..!

விமானத்தின் இருக்கையில் மலம் மற்றும் சிறுநீர் கழித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த ஒருவரே இவ்வாறு விமானத்தில் மலம் கழித்ததாகவும் சிறுநீர் கழித்ததாகவும் குறிப்பிட்டு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த வகையில், அவர் அமர்ந்திருந்த இருக்கையில் மலம் மற்றும் சிறுநீர் கழித்ததுடன் எச்சில் துப்பி தவறாக நடந்து கொண்டமையை கேபின் பணியாளர்கள் கண்டறிந்த நிலையில் விமானத்தின் கேபின் மேற்பார்வையாளரால் வாய்மொழி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி, அந்த பயணியின் துர்நடத்தை தொடர்பாக விமான கேப்டனுக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

மேலும், இதனால் சக பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளதால், விமானம் டெல்லி விமான நிலையத்தை அடைந்ததும் ஏர் இந்தியா பாதுகாப்புத் தலைவர் குற்றம்சாட்டப்பட்ட பயணியை விமான நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News