உலக சுகாதார நிறுவனம் நோய்கள் பற்றி வெளியிட்ட அறிக்கையானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந் நிலையில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னராக கொரோனாவை விட ஆபத்து நிறைந்த பெருந்தொற்றை எதிர்கொள்ள அனைவரும் தயாராக இருக்க வேண்டுமென உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2019 ம் ஆண்டு சீனாவில் கொரோனாப்பெருந்தொற்று கண்டறியப்பட்டு அதன் பின்னர் உலக நாடுகள் முழுவதும் வியாபித்த நிலையில் பொது முடக்கம் , தடுப்பூசிகள் போன்றவற்றை நடைமுறைப்படுத்தியே கட்டுப்படுத்த முடிநதது.
இந் நிலையில் உலகமம முழுவதும் அடுத்த ஒரு பெருந்தொற்றை எதிர்கொள்ள நேரிடும்என்ற உலக சுகாதார நிறுவனத் தலைவரின் கருத்து பலரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதுடன் உலக சுகாதார அமைப்பின் இணையத்தளத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய நோய்கள் தொடர்பான பட்டியல் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
இப் பட்டியலில் எபோலா , சார்ஜ் , ஜிகா வைரஸ் போன்ற தொற்று நோய்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் புதிதாக பரவவுளதாக எதிர்பார்க்கப்படும் நோயை பட்டியலின் இறுதியில் ‘Deserve x’ என அடையாளப்படுதனதியுள்ளனர்.
இது ஒருவகை வைரஸ் , பற்றீரியா மற்றும் பூஞ்சை வகையாகக் கூடக் காணப்படலாம் என்பதுடன் இதற்கான சிகிச்சை முறைகள் எவையும் அறியப்படாதவையாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 2018 ம் ஆண்டு முதலே இது போன்ற பட்டியலை வெளியிட்டு வருகையில் இப் பட்டியலை வெளியிட்ட அடுதத வருடத்திலேயே கொரோனா பெருந்தொற்று உலகளவில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியமை சுட்டிக்காட்டத்தக்கது.