Friday, January 24, 2025
HomeLatest Newsகுழந்தைகள் மத்தியில் வேகமாக பரவும் புதிய வகை இதய நோய்...! பெற்றோர்களுக்கு பகீர்...!

குழந்தைகள் மத்தியில் வேகமாக பரவும் புதிய வகை இதய நோய்…! பெற்றோர்களுக்கு பகீர்…!

புது வகை இதய தொற்று நோயால் குழந்தைகள் பாதிக்கப்படுவது பெற்றோர்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் இதய தொற்று நோயால் ஒரு குழந்தை உயிரிழந்துள்ள நிலையில் மேலும் ஏழு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு வேல்ஸ் மற்றும் மேற்கு இங்கிலாந்தில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதயத்தில் இருக்கும் வீக்கம் மற்றும் அலர்ஜியை ஏற்படுத்தும் ஒரு வகை நோய் பாதிப்பு கடந்த ஒரு வருடமாகவே பிறக்கும் குழந்தைகள் மத்தியில் கண்டறியப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இந்த நோய் பதினைந்து குழந்தைகளுக்கு கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்களின் 9 பேருக்கு எண்டோ வைரஸ் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

குறித்த வைரஸ் சுவாச நோய் மற்றும் கை மற்றும் கால்கள் தொடர்பான நோய்களுடன் , மூளை காய்ச்சலை ஏற்படுத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Recent News