இந்த வாரம் உலகின் மிகவும் வெப்பமான வாரம் என உலக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த வகையில், ஜூலை முதல் வாரத்தை உலகின் மிகவும் வெப்பமான வாரமாக உலக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக உலக வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முன்னதாகவே கடந்த ஜூன் மாதம் வெப்பநிலை புதிய உச்சத்தை எட்டிய நிலையில், ஜூலை மாதமும் அது தொடர்வதாகவும், பூமியின் சராசரி வெப்பம் ஜூலை முதல் வாரத்தில் அதிகளவு பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அதிகபட்சமாக கடந்த ஜூலை 4 ஆம் திகதி பூமியின் சராசரி வெப்பநிலை 62 புள்ளி 7 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானதாகவும் கூறப்பட்டுள்ளது.
நிலத்தில் மட்டுமின்றி கடலிலும் இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பநிலை உயர்வடைந்து சுற்றுச் சூழலிலும், சூழலியல் மாற்றத்திலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், எல் நினோ மற்றும் புவி வெப்பமயமாதல் போன்றன வெப்பநிலை உயர்வுக்கு காரணமாக அமையலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றின் மூலம், ஏற்கனவே வறட்சியிலுள்ள ஸ்பெயின் நாட்டை மேலும் மோசமாக்கும் எனவும், அமெரிக்கா மற்றும் சீனாவிலும் வெப்ப அலைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.