Saturday, January 18, 2025
HomeLatest NewsWorld Newsகுறுக்கே வரும் புது சிக்கல் - உக்ரைனை எச்சரிக்கும் அமெரிக்கா..!

குறுக்கே வரும் புது சிக்கல் – உக்ரைனை எச்சரிக்கும் அமெரிக்கா..!

உக்ரைனின் எதிர்த் தாக்குதல்களுக்கு இன்னும் 30 நாட்களே உள்ளதாக அமெரிக்காவின் உயர்மட்ட இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் ஏற்படும் குளிருடன் கூடிய வானிலையானது உக்ரைனின் படை நடவடிக்கையை மிகவும் கடினமாக்குவதோடு எதிர்த் தாக்குதலுக்கு பாரிய இடையூறாக அமையும் என அமெரிக்கா இராணுவ உயர் அதிகாரி
ஜெரனல் மார்க் மில்லி சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு தரப்பிற்கும் இடையில் கடுமையான போர் இடம்பெற்று வருவதாகவும் எதிர்பார்த்ததை விட மிகவும் மந்தமாகவே எதிர்த் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதையும் உக்ரைன் படைகள் நிலையான வேகத்தில் முன்னேறிவருவதாகவும் ஜெரனல் மார்க் மில்லி ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்தநிலையில் , குளிரான வானிலை நிலைமைகள் ஏற்படுவதற்கு இன்னும் 30 தொடக்கம் 45 நாட்கள் வரை இருக்கின்றன எனக் கூறியுள்ள அவர், இன்னும் உக்ரைனிய படைகளுக்கு காலம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recent News