Saturday, January 25, 2025
HomeLatest Newsகோட்டாவுக்கு சூட்டப்படவுள்ள புதிய பெயர்!

கோட்டாவுக்கு சூட்டப்படவுள்ள புதிய பெயர்!

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை ஜனநாயகத்தின் தந்தை என பெயரிட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

69 இலட்சம் மக்களின் ஆணையுடன் ஆட்சிக்கு வந்ததாகவும் நிறைவேற்று அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு மக்களுக்கு எதிராக எந்தவித வன்முறைச் செயலையும் அவர் செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.

மக்களை அடித்துக் கொன்று ஆட்சியில் நீடிக்க விரும்பவில்லை எனக் கூறி பதவியை விட்டு அவர் வெளியேறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன் காரணமாகவே ஜனநாயகத்தின் தந்தை என கோட்டாபயவிற்கு பெயர் சூட்டப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் தெரிவித்தார்.

Recent News