வாட்ஸ்அப் நிறுவனத்தின் தாயகமான மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் (Business) செயலிக்கு பல அத்தியாவசியமான அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆன்ரொய்ட் மற்றும் ஐஒஎஸ் ஆகிய இரண்டு சாதனங்களுக்கும் கிடைக்கக் கூடியவாறு இந்த அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதாவது வாட்ஸ்அப் (Business) செயலியின் மூலமாகவே விளம்பரங்களை உருவாக்கக்கூடிய அம்சம் அறிமுகமாகியுள்ளது.
இதன் மூலமாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வாயிலாக புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன், வாட்ஸ்அப் (Business) செயலியில் கட்டண செய்தி என்ற அம்சமும் அறிமுகமாகியுள்ளது.
வாட்ஸ்அப் தற்போது 200 மில்லியனுக்கும் அதிகமான அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட வணிக நிறுவனங்களை கொண்டுள்ளது.
தற்போது வழங்கப்பட்டுள்ள புதிய அம்சம் மூலம் வாட்ஸ்அப் (Business) இல் ஒரு மின்னஞ்சல் ஐடியை மாத்திரம் பயன்படுத்தி, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் விளம்பரங்களை உருவாக்க முடியும்.
மேலும் இந்த கட்டண செய்திமுறை அம்சமானது அதிக வாடிக்கையாளர்களுக்கு ஈர்க்கும் வகையில் அவர்களுக்கு சென்றடையக்கூடியவாறு காணப்படுகின்றது.
உலகம் முழுவதும் அறிமுகமாகவுள்ள இந்த அம்சமானது விரைவில் பயனர்களுக்கு கிடைக்கப்பெறும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.