தேசிய பொங்கல் தின நிகழ்வு இன்று யாழில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்றது.
இந்நிலையில் அங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
இந்த நாட்டிலே ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் நாடாளுமன்றில் உள்ள அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தேன். குறிப்பாக தமிழ் கட்சிகளிடமும் கலந்துரையாடியிருந்தேன். அடுத்த வாரம் கட்சித் தலைவர்களை மீளவும் அழைக்கவுள்ளேன் எனவும் தெரிவித்தார்.
மேலும்13 வது திருத்தச் சட்டத்தை நாங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளோம். இது வடக்கு மக்களுக்கான பிரச்சினை மாத்திரமல்ல இலங்கையில் உள்ள அனைவரும் கோருகின்றார்கள் இதை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அதற்காக அதை உடனடியாக முழுமையாக நடைமுறைபடுத்தி விட முடியாது. குறிப்பாக தமிழ் ,முஸ்லிம் மலையக மக்களுக்கு உள்ள பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்கு நான் முயற்சிக்கின்றேன் .
அதற்காக கட்சித் தலைவர்களை சந்திப்பதற்கு விரும்புகின்றேன். கட்டங்கட்டமாக அந்த 13வது திருத்த சட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்
அதேபோல காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை தொடர்பில் அந்த காணாமல் ஆக்கப்பட்டதற்கு என்ன நடந்தது என்பதன் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும்அதற்குரிய வேலை திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.
காணாமல் போன உறவுகளுக்கு பரிகாரம் வழங்கும் பொருட்டு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை நிறுவ தீர்மானித்துள்ளோம். குறிப்பாக என்ன நடந்தது யார் யார் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது பற்றி ஆராயவே இதனை மேற்கொண்டுள்ளோம்.
அதேவேளை பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டத்தை கொண்டுவரவுள்ளோம்.
யாழில் காணிகளை மீள பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கலந்துரையாட இருக்கின்றோம். யுத்த காலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக பாதுகாப்பு தரப்பினர் தம்வசப்படுத்திய காணிகளில் மக்களுக்கு கொடுப்பதற்கு மீதமாக 3000 ஏக்கரே மீதமாக இருக்கின்றது. அதிலே இன்னொரு பகுதியை வழங்குவதற்கு பாதுகாப்பு தரப்பினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அது தொடர்பிலும் இன்று கலந்துரையாடுவோம் எனவும் தெரிவித்தார்.