Thursday, January 23, 2025
HomeLatest Newsஅடுத்த மாதம் நாடாளுமன்றத்திற்கு வரும் புதிய சட்டமூலம்...! கட்டணத்தில் மாற்றம் ஏற்படுமா.??

அடுத்த மாதம் நாடாளுமன்றத்திற்கு வரும் புதிய சட்டமூலம்…! கட்டணத்தில் மாற்றம் ஏற்படுமா.??

மின்சாரத்துறை தொடர்பான புதிய சட்டமூலத்தை உருவாக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சம்பந்தப்பட்ட சட்டமூலத்தை தயாரித்த பின்னர், அதன் நகல்களை பங்குதாரர்கள், மேம்பாட்டு முகவர்கள் மற்றும் மறுசீரமைப்பு நிபுணர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அவரது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமூலம் தொடர்பான அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

புதிய மின்சார சட்டமூலத்தின் இறுதி வரைபு இம்மாத இறுதியில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட பின்னர் அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recent News