Monday, December 23, 2024
HomeLatest Newsதேச விடுதலைக்காக உயிர்நீத்த மகனுக்கு அஞ்சலி செலுத்த காத்துக்கிடக்கும் தாயொருவர்!

தேச விடுதலைக்காக உயிர்நீத்த மகனுக்கு அஞ்சலி செலுத்த காத்துக்கிடக்கும் தாயொருவர்!

தேச விடுதலைக்காக உயிர்நீத்த தனது மகனுக்கு அஞ்சலி செலுத்த கிளிநொச்சி  கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் தாயொருவர் காத்துநிற்கின்றார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தாயக விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூறும் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் இன்றாகும்.

இந்நிலையில் இன்றையதினம் இலங்கை உட்பட  தமிழ் மக்கள் வாழும் உலக நாடுகளிலும் இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்வேறு பொது இடங்கள் மற்றும் மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர்களை நினைவுகூறுவதற்கு ஏதுவாக நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் இன்றையதினம் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ளது.

அவ்வாறான நிலையில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு சற்றுமுன் வருகை தந்த மாவீரர் ஒருவரின் தாயார் கண்ணீர் மல்ல தமிழ் தேசத்திற்காக இன்னுயிரை ஈகம் செய்த தனது பிள்ளையை நினைவுகூர்வதற்காக காத்து நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Recent News