Tuesday, December 24, 2024
HomeLatest Newsஅட்டகாசமான வசதிகளுடன் நடமாடும் பேருந்து உணவகம்- நம்ம இலங்கையில இப்பிடியும் இருக்கா!

அட்டகாசமான வசதிகளுடன் நடமாடும் பேருந்து உணவகம்- நம்ம இலங்கையில இப்பிடியும் இருக்கா!

இலங்கையின் திம்புலாகல சிறிபுர நகரத்தில் பேருந்திற்குள் உணவகம் நடத்தும் நபர் ஒருவர் தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இவ்வாறு பேருந்திற்குள் உணவகம் ஒன்று 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையினால் நடத்தப்பட்டு வருகின்றது.

பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரை பேருந்திற்குள் ஹோட்டல் நடத்தப்படுகிறது.

இந்த பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு பேட்டரிகள் மூலம் இரவு நேரத்தில் மின்சாரம் கிடைக்கிறது.

ஏனைய உணவகங்களிலுள்ள அனைத்து வசதிகளும் இந்த பேருந்தில் இருப்பது சிறப்பம்சமாகும்.

இந்த பஸ்சில் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஹோட்டலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இரவு பகலாக எந்த இடத்திற்கும் சென்று திருமண விருந்துகளை ஏற்று ஹோட்டல் சேவைகளை வழங்குவது வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News