இன்று இரவு சந்திரன், வெள்ளி மற்றும் செவ்வாய் கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு வானில் நிகழவுள்ளது.
மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் சந்திரன், வியாழன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்களை கண்களால் பார்க்க முடியும்.
பொது கலந்தாய்வு ஜூன் 1 ஆம் திகதி தொடங்கவுள்ளது. இதனை தொலைநோக்கிகள் போன்ற உபகரணங்களை கொண்டு பார்க்க முடியும்.
கிண்டியில் உள்ள ஸ்பேஸ் ஆர்கேடில் இதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் தொலைநோக்கிகள் மூலம் வானில் தோன்றும் கிரகங்களின் இணைப்பு நிகழ்வை பார்க்க முடியும் என அதன் தலைமை செயல் அதிகாரி நீரஜ்லடியா கூறியுள்ளார்.
மேலும் இன்று இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை 3 கிரகங்கள் நேர்கோட்டில் சந்திப்பதை தொலைநோக்கிகள் மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.