சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊடுருவல் மற்றும் கடத்தல் முயற்சிகளை முறியடிக்க இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 17 வரை எல்லை பாதுகாப்பு படை ஆபரேஷன் அலெர்ட்டை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதன் போது, இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் பி.எஸ். எஃப். பாதுகாப்பு சோதனைச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, ரோந்து நடவடிக்கைகள் ஆகியவை மேம்படுத்தப்படும் என்று எல்லை பாதுகாப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் புனீத் ரஸ்தோகி தெரிவித்தார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பிஎஸ்எஃப் தனது பாதுகாப்புகளை அதிகரிக்கிறது என்றார். ஆண்டு முழுவதும் எல்லையில் பிஎஸ்எஃப் எச்சரிக்கையாக இருந்தாலும், இந்த நாட்களில் எல்லை காக்கும் படை மிகவும் எச்சரிக்கையாக மாறும் என்று திரு ரஸ்தோகி கூறினார்.
இந்த காலகட்டத்தில் முக்கியமான பகுதிகளில் ஜவான்கள் நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.