அரசாங்கத்தின் அடக்குமுறை செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரியும், அணைத்து பல்கலை கழக மாணவ ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே, ஸ்ரீறிதம்ப தேரர் உள்ளிடவர்களை உடன் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி கொழும்பு மருதனை எல். பின்ஸ்டன் மண்டபத்துக்கு முன்னால் உள்ள சுற்று வட்டத்தில் தற்போது ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் பேரணியாக கொழும்பு கோட்டை புகையிரதம் நிலையம் வரை செல்ல உள்ளதோடு அங்கு பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.
அடக்குமுறைக்கு எதிரான மக்கள் சக்தி’ எனும் தொனிப்பொருளின்கீழ் முன்னெடுக்கப்படு வரும் குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, 150 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் , வெகுஜன அமைப்புகள் , இளம் சட்டதரணி சங்கத்தினர், சட்டத்தரணிகள் சங்கத்தினர், சுகாதார அமைப்புகள் திரைப்பட கலைஞர்கள், என பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளாதோடு தொடர் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை கொழும்பின் பல பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.