ஆண் ஒருவர் தனது உயரத்தினை 7 அங்குலம் அதிகரிப்பதற்காக இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 88 லட்ச ரூபாயை செலவு செய்துள்ளமை அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஆறடி உயரம் கொண்ட 33 வயதான பிரையன் சான்செஸ் என்பவரே இவ்வாறான முயற்சியில் இறங்கியுள்ளார்.
பிரையன், உடலின் மேல் பகுதிக்கும், குறுகிய கால் பகுதிக்கும் இடையே ஏற்றத்தாழ்வு இருப்பதாக உணர்ந்தமையால் தனது உயரத்தை அதிகரிக்க விரும்பியுள்ளார்.
அவருக்கு துருக்கியில் உள்ள லிவ் லைஃப் டாலர் கிளினிக் எனும் மருத்துவமனையில் இதற்கான சிகிச்சை செய்யப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் அவரது கால் பகுதியில் இருந்த சில எலும்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு பின்னர் இரும்பு ராடுகள் பொருத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரது தொடை பகுதியில் இரண்டாவது அறுவை சிகிச்சை செய்வதற்காக சுமார் 57.5 லட்ச ரூபாயை செலவளித்த நிலையில், இரு அறுவை சிகிச்சைக்குமாக ரூ.88 லட்சம் ரூபாயை செலவழித்துள்ளார்.
இரண்டாவது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் அவரது உயரம் முன்னரை காட்டிலும் 3.5 அங்குலம் உயர்ந்துள்ளது.
இந்த சிகிச்சைகள் தொடர்பாக பிரையன், உயரத்தை அதிகரிக்க வலிமிகுந்த பாதையை தேர்வு செய்ததில் எவ் விதமான வருத்தமும் இல்லை என்றும் தான் முழுமையாக குணமடைந்த பின்னர் தனது உயரம் 6 அடி 7 அங்குலமாக உயரும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.