Tuesday, December 24, 2024
HomeLatest News6 மில்லியன் பவுண்டுகளிற்கு ஏலம் விடப்பட்டுள்ள லவ் லெட்டர்...!வாய் பிளக்கும் காதல் ஜோடிகள்...!

6 மில்லியன் பவுண்டுகளிற்கு ஏலம் விடப்பட்டுள்ள லவ் லெட்டர்…!வாய் பிளக்கும் காதல் ஜோடிகள்…!

லவ் லெட்டர் ஒன்று ஆறு மில்லியன் பிரிட்டன் பவுண்டுகளிற்கு ஏலம் விடப்பட்டுள்ளமை அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.

அந்த வகையில் 16 ஆம் நூற்றாண்டில் பிரபல இசைக்கலைஞராக திகழ்ந்த மோஸராக் தனது காதல் குறித்து எழுதிய கடிதமே இவ்வாறு லண்டனில் ஏலம் விடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டில் 1156 ஆம் ஆண்டு பிறந்த மோஸராக் 1791 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

வெறும் 35 ஆண்டுகள் மட்டுமே அவர் வாழ்ந்திருந்திருப்பினும் தனது இசைத் திறமையால் பலரை இயங்க வைத்துள்ளதுடன், இவரது புகழ் ஐரோப்பிய கண்டம் முழுவதும் பரவியுள்ளது.

இந்நிலையில், அவரது காதல் வாழ்க்கை தொடர்பான கடிதம் என்பதால் அதற்கு ஆறு மில்லியன் பிரிட்டன் பவுண்டுகள் என்று அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மோஸராக், இந்த கடிதத்தினை தனது நெருங்கிய நண்பரான பரோனஸ் வான் வால்ட்ஸ்டாட்டன்க்கு அனுப்பியுள்ளார்.

இருபத்தி ஆறு வயதான அவர், வருங்கால மனைவியை காவல்துறையினர் வீட்டை விட்டு வெளியே இழுக்கும் அவதூறைத் தவிர்க்க இரண்டு நாட்களுக்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இரண்டு பக்க கையெழுத்துடன் ஜெர்மன் மொழியில் அவர் வியன்னாவில் இருந்த போது இந்த கடிதத்தினை எழுதியுள்ளார்.

ஊழலைத் தவிர்ப்பதற்கு தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அந்த கடிதத்தில் மோஸராக் குறிப்பிட்டுள்ளமை வியத்தகு விடயமாகவே பார்க்கப்படுகின்றது.

மேலும், ஒரு கடிதம் இவ்வளவு மிகவும் அதிகளவான தொகைக்கு ஏலம் போவது இதுவே முதல் முறை என்று ஏலம் விடும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Recent News