Wednesday, December 25, 2024
HomeLatest Newsகுடும்பமொன்றின் வாழ்வையே முடித்த பல்லி!

குடும்பமொன்றின் வாழ்வையே முடித்த பல்லி!

நைஜீரியாவின் ஓகுன் மாகாணத்தில் ஆறு பேர் கொண்ட குடும்பம் பல்லியால் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜோன் சாமுவேல், அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் உறவினர்கள் இருவர் என மொத்தமாக அறுவர் உயிரிழந்துள்ளனர்.

சாமுவேல் வசித்த வீட்டில் இருந்து சத்தம் வராததால், அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது, ​​சாமுவேல் உள்ளிட்டோர் ஒவ்வொரு அறையிலும் இறந்து கிடந்ததாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.

இரவு உணவு உண்ட பின்னர் அவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், உணவில் விஷம் கலந்தமையே மரணத்திற்கு காரணம் எனவும் நைஜீரிய காவல்துறையினரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

அக்கம்பக்கத்தினர் வீட்டைச் சோதித்தபோது சாமுவேல் மற்றும் பலர் இரவு உணவிற்கு எடுத்துச் சென்ற சூப் பானையில் பல்லி இறந்து கிடந்ததாகவும், அந்த பல்லிதான் மரணத்துக்குக் காரணம் என்றும் நைஜீரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Recent News