Tuesday, December 24, 2024
HomeLatest News3998ரூபாவிற்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெங்காயம்!

3998ரூபாவிற்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெங்காயம்!

பிலிப்பைன்ஸில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை தற்போது 600 பிசோஸ் (pesos) (இலங்கை மதிப்பு ரூ.3998) என்ற விலையில் விற்கப்படுகிறது.

அந்நாட்டில் ஒரு கிலோ இறைச்சியை விட அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெங்காயம் வாங்கவேண்டுமானால் ஒரு நாள் வேலைக்கான பிலிப்பைன்ஸின் குறைந்தபட்ச ஊதியத்தை விட அதிகம் செலவு செய்ய வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது.

உள்நாட்டு உற்பத்தி, விநியோகம் குறைந்து வருவதாலும், அதிகரித்து வரும் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் மார்ச் மாதத்திற்குள் சுமார் 22,000 தொன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டும் என விவசாய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ரஷ்யா – உக்ரேன் போர், விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் தீவிர காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் உலகளாவிய ரீதியில் பணவீக்கம் அதிகரித்து, உலகளவில் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன. இதன் தாக்கம் பிலிப்பைன்ஸிலும் எதிரொலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Recent News