Tuesday, December 24, 2024
HomeLatest Newsமதுபோதையில் உறங்கிய யானைக்கூட்டத்தால் பரபரப்பு!

மதுபோதையில் உறங்கிய யானைக்கூட்டத்தால் பரபரப்பு!

ஒடிசாவில் இலுப்பைப்பூ சாராயம் குடித்து போதையில் உறங்கிய யானைக் கூட்டத்தால் குழப்ப நிலை தோன்றியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலுப்பை மரப் பூக்களை நீரில் ஊறவைத்து சாராயம் தயாரிப்பது  ஒடிசாவில் பல பழங்குடியின சமுதாயத்தினரின் வழக்கம் . அப்படித்தான் ஓடிசா மாநிலத்தில் கியோன்ஜர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தினர் இலுப்பைப் பூ சாராயம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார்.

அவர்கள் தங்கள் கிராமத்துக்கு அருகில் உள்ள முந்திரிக்காட்டுப் பகுதியில் பெரிய பெரிய பானைகளில் தண்ணீரில் இலுப்பைப் பூக்களை ஊறவைத்தனர்.

மறுநாள் காலையில் அதிலிருந்து ‘மக்குவா’ என்று நாட்டு சாராயம் தயாரிப்பதற்காக அங்கு சென்ற கிராமத்தினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அந்தப் பானைகள் எல்லாம் உடைத்து கிடக்க அருகிலேயே 24 யானைகள் கொண்ட ஒரு கூட்டம், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. அவற்றை எழுப்புவதற்கு கிராம மக்கள் செய்த முயற்சி பலனளிக்கவில்லை. அதன் பிறகு வனத்துறையினருக்கு அவர்கள் தெரிவித்தனர்.

வனத்துறையினர் வந்து, பெரிய மேளங்களை அடித்து  சப்தம் எழும்பிய பிறகு தான் அந்த யானைகள் உறக்கத்திலிருந்து விழித்து காட்டிற்குள் சென்றன.

குறித்த யானைகளள் போதையில்தான் உறங்கியது என்று கூறமுடியாது எனவும் சாதாரணமாகவும் தூங்கியிருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால் சாராயப் பானைகள் எல்லாம் உடைந்து கிடந்த நிலையில் பக்கத்திலேயே யானைகள் படுத்திருந்தன. எனவே அவை நிச்சயம்  சாராயம் குடித்திருக்க வேண்டும் எனவும் கிராமத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்

Recent News