Thursday, January 23, 2025
HomeLatest NewsIndia Newsஅரிய வகை ரத்தம் கொண்ட சிறுமி..!உயிரை காப்பாற்றிய வைத்தியர்கள்..!

அரிய வகை ரத்தம் கொண்ட சிறுமி..!உயிரை காப்பாற்றிய வைத்தியர்கள்..!

அரிய வகை ரத்தம் கொண்ட சிறுமி ஒருவரை ரத்த சோகையில் இருந்து வைத்தியர்கள் மீட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் அருகிலுள்ள பகுதியைச் சேர்ந்தவர் 3 வயது சிறுமியையே வைத்தியர்கள் காப்பாற்றியுள்ளனர்.

குறித்த சிறுமி 4 நாட்களுக்கு முன்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை கல்லூரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டுள்ளார்.

அந்த சிறுமியின் உடலில் ரத்தம் குறைவால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த வேளை அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது ரத்தம் அரியவகை ரத்தப் பிரிவான பாம்பே வகை ரத்தம் என தெரிந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அந்த அரியவகை ரத்தமான பாம்பே வகை பெங்களூரில் இருப்பதை அறிந்து கொண்டுள்ள நிலையில், பெங்களூரிலுள்ள ரத்த வங்கியை தொடர்பு கொண்டு திருவண்ணாமலைக்கு ரயில் மூலம் ரத்தம் கொண்டு வர செய்துள்ளனர்.

அதையடுத்து, வைத்தியர்கள் சிறுமியின் உடலில் ரத்தத்தை ஏற்றியுள்ள நிலையில் சிறுமியின் உடல் நிலை சீராகியுள்ளது.

அதனை தொடர்ந்து, தற்சமயம் அவருக்கு ரத்த சோகைக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News