Thursday, January 23, 2025
HomeLatest Newsதலைமுடியில் அந்தரத்தில் தொங்கி சாகசம் செய்யும் பெண்...!

தலைமுடியில் அந்தரத்தில் தொங்கி சாகசம் செய்யும் பெண்…!

துனீசியாவைச் சேர்ந்த சாரா என்ற 21 வயதுடைய பெண் தலைமுடியில் அந்தரத்தில் விளையாட்டாகத் தொங்கிய விடயம் தற்போது அவரின் தொழிலாக மாறியுள்ளது.

ஆரம்பத்தில் பல்வேறு சவால்களுக்குமத்தியில் ஆரம்பித்தாலும் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்ந்துள்ள விடயமாக மாற்றம் பெற்றுள்ளமை தொடர்பில் சாரா தனது அனுபவப் பகிர்வைப் பகிர்கையில் :-

ஆரம்பத்தில் பயிற்சியாளர் இல்லாமல் புதிதாக நான் முயன்று கற்றுக்கொள்ளும் போது கடினமாக இருந்தது. நான் இது குறித்து ய்வு செய்ய ஆரம்பித்து எனது முடியைக் கொண்டு தொங்குவதற்கு உதவும் கருவிகள் குறி்த்தும் தலைமுடி மற்றும் உடலின் ஆரோக்கியத்தப் பேணுவது எப்படி என்றும் ஆராய்ச்சி செய்தேன்

ஆரம்பத்தில் பல உத்திகளைக் கற்பது கடினமாக இருந்தது. ஏனெனில் அவை தொழில் இரகசியமாகக் கருதப்பட்டு பரம்பரை பரம்பரையாகப் பயிற்றுவிக்கப்பட்டு வந்தது.

அமெரிக்காவின் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றைப் பார்த்தேன். தலைமுடியால் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு பல சாகசங்களைப் புரிந்தார். அதன் பின்னர் இதனைக் கற்றுக்கொள்ள வேண்டும் என உள்மனம் கூறியது. இப்படித் தான் எனது சாகசப் பயணமும் ஆரம்பமானது.

ஆரம்பத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட எதிர்ப்பால் பாட்டி வீட்டின் நடுவில் ஒரு இடத்தை தயார் செய்து அங்கு பயிற்சிகளை ஆரம்பித்தேன். முதல் முதலில் தலைமுடியில் தொங்கும் போது எனது தாயாரால் நம்ப முடியவில்லை. அவ்வாறான காணொலிகளை இணையத்தில் பகிரும் போது பலர் விமர்சிப்பார்கள் எனவும் பலர் சந்தேகத்துடன் நோக்குவார்கள் எனவும் கருதினேன். அதே நேரத்தில் பலருக்கு உந்துசக்தியாகவும் இருக்குமென நம்பினேன். சில காணொலிகள் இணையத்தில் வைரலாகின.

தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பொழுதுபோக்காக பங்கெடுத்தாலும் பிற்காலத்தில் அதுவே தொழிலாக மாறியது. பார்வையாளர்களுடன் கலந்துரையாடல்களையும் நடாத்தியுள்ளேன். எனது பெயரானது இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அடையாளமாக இருக்க வேண்டும் என்று குறித்த விடயத்தை தொடர்ந்தவண்ணமுள்ளேன்.என தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்

Recent News