Tuesday, December 24, 2024
HomeLatest Newsநீண்ட நாள் காதலியின் பரிசு..!ஏலம் விடப்படவுள்ள ஹிட்லரின் பென்சில்..!

நீண்ட நாள் காதலியின் பரிசு..!ஏலம் விடப்படவுள்ள ஹிட்லரின் பென்சில்..!

ஹிட்லருக்குச் சொந்தமானது என்று கூறப்படுகின்ற பென்சில் ஏலத்தில் விடப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த பென்சிலானது ஜூன் 6 ஆம் திகதி வட அயர்லந்தில் உள்ள பெல்பாஸ்ட் நகரில் நடைபெறவுள்ள ப்ளூம்ஃபீல்ட் ஏலத்தில் மீண்டும் விற்கப்படவுள்ளது.

குறித்த பென்சிலானது 80,000 பவுண்ட் வரையிலான தொகைக்கு ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தப் பென்சிலை அவரின் நீண்ட நாள் காதலி எவா பிரான் 1941 ஆம் ஆண்டு ஹிட்லரின் 52 ஆவது பிறந்த நாள் பரிசாக வழங்கினார் கொடுத்தார் எனக் கூறப்படுகின்றது.

எவா என்று ஜெர்மன் மொழியிலும் AH என்ற எழுத்துகளும் பொறிக்கப்பட்டுள்ள இந்த பென்சிலை 2002 ஆம் ஆண்டு ஒருவர் ஏலத்தில் வாங்கியுள்ளார். இந்நிலையில் இது மீண்டும் ஏலத்தில் விடப்படவுள்ளது.

அது மட்டுமன்றி, அதனுடன் கையெழுத்திடப்பட்ட ஹிட்லரின் படம், விக்டோரியா அரசியால் வழங்கப்பட்ட கையால் எழுதப்பட்ட மன்னிப்பு ஆவணம் ஆகியவையும் ஏலம் விடப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

Recent News