Thursday, January 23, 2025
HomeLatest Newsகனடாவில் மனித முகத்திற்கு நிகரான இராட்சத கடல் அலை!

கனடாவில் மனித முகத்திற்கு நிகரான இராட்சத கடல் அலை!

கனடாவில் மனித முகத்தை போன்று காட்சியளித்த  இராட்சத கடல் அலை புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியோவின் இங்கர்சொல் பகுதியைச் சேர்ந்த கொடே இவன்ஸ் என்ற புகைப்படக் கலைஞரே இந்த புகைப்படத்தை எடுத்து அசத்தியுள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு முதல் வன விலங்குகள் மற்றும் இயற்கை தொடர்பான புகைப்படங்களை தாம் எடுத்து வருவதாக இவன்ஸ் தெரிவிக்கின்றார்.

கடந்த சனிக்கிழமை பலத்த காற்றுடனான காலநிலையில் கடல் அலையை தாம் புகைப்படம் எடுத்திருந்ததாகத் தெரிவிக்கின்றார்.

காலநிலை எதிர்வுகூறல்களின் அடிப்படையில் தாம் கடற் கரையில் புகைப்படம் எடுக்கச் சென்றதாக குறிப்பிடுகின்றார்.

அன்றைய நாள் மிகவும் குளிரானது எனவும் சுமார் மறை 11 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை காணப்பட்டது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

பனிப் படர்ந்திருந்த காரணத்தினால் புகைப்படங்களை தெளிவாக எடுக்க முடியாதிருந்த போது திடீரென 15 நிமிடங்கள் சூரியன் தென்பட்டதாகவும் அதன் போதே புகைப்படங்களை துல்லியமாக எடுக்க கிடைத்தது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ஆறு மீற்றர் உயரத்தில் கடல் அலைகள் ஏற்பட்டதாகவும் அலைகள் ஒன்றுக்கு ஒன்று மோதிக் கொண்ட காட்சிகள் சிறப்பாக அமைந்திருந்தது எனவும் அவர் தெரிவிக்கின்றார். 

இவ்வாறு எடுக்கப்பட்ட கடல் அலையின் புகைப்படமொன்று மனித முகத்தை பிரதிபலிக்கும் வகையில் காணப்பட்டது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Recent News