Tuesday, December 24, 2024
HomeLatest Newsநீச்சல் தடாகத்திற்கு அருகில் வழுக்கி விழுந்து வெளிநாட்டுப் பிரஜை மரணம்!

நீச்சல் தடாகத்திற்கு அருகில் வழுக்கி விழுந்து வெளிநாட்டுப் பிரஜை மரணம்!

அஹூங்கல்ல பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றி நீச்சல் தடாகத்திற்கு அருகில் வழுக்கி விழுந்து வெளிநாட்டுப் பிரஜை நேற்று உயிரிழந்துள்ளார்.

பிரான்ஸ் குடியுரிமையை கொண்டுள்ள 60 வயதான இலங்கையர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் தனது குடும்பத்துடன் இலங்கைக்கு வந்திருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

நீச்சல் தடாகத்திற்கு அருகில் வழுக்கி விழுந்த இந்த நபர், பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பலப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.  

Recent News