Friday, January 24, 2025
HomeLatest Newsமுள் படுக்கையில் படுத்து அருள்வாக்கு சொல்லும் பெண் சாமியார்!

முள் படுக்கையில் படுத்து அருள்வாக்கு சொல்லும் பெண் சாமியார்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே லாடனேந்தல் கிராமத்தில் அருள்மிகு பூங்காவனம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது இங்கு நாப்பத்தி ஆறாவது மண்டல பூஜை நடைபெற்று வருகிறது

இங்கு தவமிருந்து ஸ்ரீலஸ்ரீ நாகராணி அம்மையார் என்னும் பெண் சாமியார் 46 ஆண்டுகளாக முள் படுக்கையில் படுத்து பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறி வருகிறார்

இன்று அந்த கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்று அங்கு பெண் சாமியார் ஸ்ரீலஸ்ரீ நாகராணி அம்மையார் பக்தர்கள் மத்தியில் ஆறு அடிக்கு மேல் முள் குவியலில் மேலே ஏறி சாமியாடி அந்த முள் படுக்கையில் படுத்து அருள்வாக்கு கூறினார்

இதனைக் காண அந்த சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்களும் மேலும் திருப்புவனம், மதுரை, சிவகங்கை, மானாமதுரையில் இருந்தும் மக்கள் இந்த திருவிழாவை காண வந்திருந்தனர்

இன்று காலையிலிருந்து அங்கு குவிந்த பெண்கள் கும்மி பாட்டுப் பாடி நடனமாடினர்அதன் பின்பு திரு ஸ்ரீலஸ்ரீ நாகராணி அம்மையார் சாமியாடி வந்து முள் படுக்கையில் படுத்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.

Recent News