Thursday, January 23, 2025
HomeLatest News3 வயது மகளை, போதையில் நாசம் செய்த அப்பா - யாழில் கொடூரம்

3 வயது மகளை, போதையில் நாசம் செய்த அப்பா – யாழில் கொடூரம்

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், 3 வயது பெண் குழந்தையை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ,குறித்த குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 மதுபோதையில் நேற்று முன்தினம் வீட்டுக்குச்  சென்ற குறித்த தந்தை, தனது குழந்தையை துஷ்பிரயோகத்துக்கு  உட்படுத்தியுள்ளார் என ,குழந்தையின் தாயார்  பொலிஸில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.  பரிசோதனையின்போது குழந்தை துஷ்பிரயோகத்துக்கு  உட்படுத்தப்பட்டமை  உறுதிப்படுத்தப்பட்டது.

 இதனை அடுத்து குறித்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் கஞ்சா மற்றும் கசிப்பு  போன்ற போதைக்கு  அடிமையானவர் எனவும், போதைப்பொருள் வாங்குவதற்காக  தனது மனைவியை பிறருடன் உடல் உறவில் ஈடுபடுமாறு  கட்டாயப்படுத்தி வந்துள்ளார் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Recent News