Tuesday, December 24, 2024
HomeLatest News‘அவதார் 2’ பார்க்க சென்ற ரசிகருக்கு திடீர் ஹார்ட் அட்டாக்! - தியேட்டரில் உயிரிழந்த பரிதாபம்

‘அவதார் 2’ பார்க்க சென்ற ரசிகருக்கு திடீர் ஹார்ட் அட்டாக்! – தியேட்டரில் உயிரிழந்த பரிதாபம்

ஆந்திராவின் காக்கிநாடா மாவட்டத்தில் அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படத்தை தியேட்டரில் பார்த்துக் கொண்டிருந்த லட்சுமி ரெட்டி என்ற நபர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பெத்தபுரத்தில் நடந்துள்ளது. சமீபத்தில் வெளியான ஹாலிவுட் படமான அவதார் 2 படத்தை லட்சுமி ரெட்டி ஸ்ரீனு என்ற நபர் தனது சகோதரருடன் சேர்ந்து பார்க்க சென்றுள்ளார். அவர் படம் பார்க்கும் போது மிகுந்த உற்சாகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பின் திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார்.

உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பால் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.படம் பார்க்கும்போது அவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். லட்சுமி ரெட்டி ஸ்ரீனுவுக்கும் இரண்டு குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Recent News