Thursday, January 23, 2025
HomeLatest Newsதன்னைக் கத்தியால் குத்திய சம்பவத்தை நூலாக எழுதவுள்ள பிரபல எழுத்தாளர்.....!

தன்னைக் கத்தியால் குத்திய சம்பவத்தை நூலாக எழுதவுள்ள பிரபல எழுத்தாளர்…..!

இந்தியாவில் பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி 1988 ம் ஆண்டு எழுதிய புத்தகம் பெரும் சர்ச்சையைக் கிளப்பிமது.

இதன் விளைவாக அவருக்கு பல நாடுகளிலிருந்து அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையி்ல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ம் திகதி அமெரிக்கா நியூயோர்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கெடுத்திருந்த போது அவர் ஒரு இளைஞனின் கத்திக்குத்துக்குள்ளாகி கண்பார்வையை இழந்தார்.

இச்சம்பவத்திற்குப் பின் கடந்த 20 ம் திகதி நியூயோர்க்கில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் போதே தன் மீதான கத்திக்குத்துத் தாக்குதல் பற்றி புத்தகமொன்றை எழுதி வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Recent News